Asianet News TamilAsianet News Tamil

வயாகரா  வாங்கப் போறீங்களா ? நீங்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க .....

How to use viagra doctors suggestions
How to use viagra doctors suggestions
Author
First Published Jun 1, 2018, 1:41 AM IST


உடல் உறவின்போது விறைப்புத் தன்மை இல்லாமல் இருக்கும் பிரச்சனையால் அவதிப்படும் ஆண்கள் வயாகரா மாத்திரைகள் வாங்கப் போகும்போது  எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

How to use viagra doctors suggestions

வயாகரா கனெக்டை வாங்கும் போது ஆண்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?  யார் இம்மருந்தினை எடுத்து கொள்ளலாம்?

விறைப்புதன்மை இல்லாமல் அவதியுறும் ஆண்கள் இம்மருந்தினை எடுத்து கொள்ளலாம்.

ஆனால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இம்மருந்தினை வாங்க முடியாது.

பெண்கள், தங்கள் இணையருக்காக வாங்கலாம். ஆனால், அதற்கும் மருந்தாளுனரின் ஒப்புதல் தேவை.

உடலுறவு கொள்ள தகுதியற்ற ஆண்கள் இம்மருந்தினை வாங்க முடியாது. அதாவது தீவிர இதய நோய் மற்றும் இரத்த நாளம் பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தினை வாங்க முடியாது.

How to use viagra doctors suggestions

வயாகரா மாத்திரைகள் வாங்குவதற்கு முன் யாருடனாவது கலந்தாலோசிக்க வேண்டுமா மற்றும் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமா?

மருந்தாளுனரிடம் உரையாடினாலே போதுமானது. உங்களது உடல்நிலை குறித்து அவருடன் ஆலோசித்து இம்மருந்தினை வாங்கலாம்.

உடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை.

How to use viagra doctors suggestions

இம்மருந்து உண்மையிலேயே பலன் தருமா?

பெரும்பாலான சமயங்களில் இது பலன் தருகிறது. ஆனால், அனைவருக்கும் இது ஒரே மாதிரியான பலன் தராது.

இம்மருந்து ஆண்குறியில் உள்ள ரத்த நாளங்களை தளர்வடைய செய்து, ரத்த ஓட்டத்திற்கு உதவி செய்கிறது.

இது உணவு அருந்தியோ அல்லது உணவு அருந்தாமலோ எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அதிகமாக உணவு உட்கொண்ட உடனே இம்மருந்தை எடுத்துக் கொண்டால், மருந்து வேலை செய்ய சில நேரங்கள் எடுக்கும்.

How to use viagra doctors suggestions

என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படலாம்?

தலைவலி   தலைசுற்றல்   மூக்கடைப்பு   குமட்டல்

அதே நேரம் நெஞ்சு வலி, பார்வை குறைபாடு ஏறப்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இணையத்தில் வாங்க முடியுமா?

வாங்கலாம்... ஆனால், மருந்தாளுநருடன் ஓர் இணையவழி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios