பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், தற்போது இந்தியா டிஜிட்டல் உலகை நோக்கி செல்கிறது. அதாவது மொபைல் மூலமே அனைத்து பண பரிவர்த்தனைகள் செய்ய வேண்டிய நிலைமை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை தொடர்ந்து தற்போது, Paytm நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இதன் மூலம் பல பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் .

இன்று, அதன் அடுத்த கட்டமாக, மேலும் ஒரு சலுகையை அறிவிச்சி இருக்கு Paytm .....

அதன்படி,

டோல் ப்ரீ நம்பர் : 1800-1800-1234 அறிவிச்சி இருக்காங்க .

இந்த நம்பருக்கு கால் செய்து அவர்கள் தெரிவிக்கும் வழிமுறையை கொண்டு , நாம் சுலபமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட முடியும்.

இதற்கு இன்டர்நெட் கனக்ஷன் தேவை இல்லை ....

சொல்லப்போனால், Paytm மூலம், பணபரிவர்தனை ( பெறவும் முடியும், அனுப்பவும் முடியும் )

Paytm பயன்படுத்துவது எப்படி ?

முதலில் Paytm இல் , ரிஜிஸ்டர் செய்யவும்.(நம் மொபைல் எண்ணை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து, பின் 4-digit Paytm PIN எண்ணை தேர்வு செய்யவும்.

பின்னர் மேல குறிப்பிட்ட டோல் ப்ரீ எண்ணிற்கு கால் செய்து, நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய மொபைல் எண், எவ்வளவு பணம், அவர்களுடைய 4-digit Paytm PIN பதிவு செய்யவும்.

 இதுமட்டும் இல்லாமல், Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ், எலெக்ட்ரிசிட்டி பில், டேட்டா கார்டு, டி டி எச் உள்ளிட்ட அனைத்தும் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.

தற்போது Paytm வசதி மூலம், டாக்ஸி , ஆட்டோ, பெட்ரோல் பங்க், ஹோட்டல் காபி ஷாப் , பார்மசி மூவி டிக்கட் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம் .