வீடு துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க அருமையான வழிகள் இதோ......

நம் அனைவருக்கும் நிறைவான மன அமைதியை கொடுக்கும் நமது வீட்டை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

எனவே அன்றாடம் நமது வீட்டை சுத்தம் செய்து துர்நாற்றம் வீசாமல் பராமரிப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அன்றாட இரவில் பின்பற்ற வேண்டியவைகள்..:

நாம் தினமும் இரவில், உணவு சமைத்த பாத்திரங்கள் மற்றும் சாப்பிட்ட தட்டுகளை நன்றாக கழுவி, பாத்திரம் கழுவும் இடத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்துவிட வேண்டும்.

தினமும் உணவுகள் சமைக்கும் அடுப்பை சுத்தம் செய்து, அடுப்பில் வினிகர் மற்றும் உப்பு கலந்த கலவையை தெளித்து, சோப்பு பயன்படுத்தி தேய்த்து, பின் ஈரத்துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் அடுப்பில் எண்ணெய் பசை இல்லாமல் புதிது போன்று இருக்கும்.

நம் வீட்டுல் தரையில் பயன்படுத்தும் விரிப்புகளை ஒவ்வொரு நாளின் இறுதியிலும், கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் வீட்டினுள் தூசிகள் தங்கி, அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நாம் அன்றாடம் தூங்கும் படுக்கையை தினமும் நன்றாக தட்டி தூசுகளை நீக்கி விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

காலணிகள் வைக்கும் இடம் மற்றும் காலணிகளை தினமும் சுத்தம் செய்து விட்டு பின் அந்த இடத்தில் காலணிகளை வைக்க வேண்டும்.

நமது வீட்டின் கழிவறைகளை இரவில் தூங்க செல்லும் முன், ஒரு வாளி தண்ணீரை விட்டு, நன்றாக ழுவி விட வேண்டும். பின் கழிவறையின் ஜன்னல் அறையைத் திறந்து வைக்க வேண்டும். இதனால் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.