Asianet News TamilAsianet News Tamil

"மாத்திரை" சாப்பிடும் போது இதுநாள் வரை நீங்கள் செய்த "தவறை" உடனே நிறுத்துங்கள்..!

how to take medicine in proper way
how to take medicine in proper way
Author
First Published May 29, 2018, 4:16 PM IST


மாத்திரை சாப்பிடும் போது இதுநாள் வரை நீங்கள் செய்த தவறை உடனே நிறுத்துங்கள்..!

பொதுவாகவே மாத்திரைகள் சாப்பிடும் போது நாம் சில விஷயங்களை கவனிக்க  வேண்டும்.

உண்பதற்கு முன் அல்லது உண்பதற்கு பின் என்ற வகைகளில் தான் மாத்திரைகள்  எடுத்துக்கொள்கிறார்கள்.

சில மாத்திரைகள் உண்ணும் போதே எடுத்துகொள்ள நேரிடும்.. இவை அனைத்தையும்  மருத்துவர்கள் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மாத்திரைகள் சாப்பிடும் போது, தண்ணீர் பால், டீ, காபி,குளிர்ந்த  நீர், ஜூஸ் உள்ளிட்ட பானங்களில்  மாத்திரையை விழுங்குவதும் உண்டு.

இவ்வாறு எடுத்துக்கொள்வதால் பல  பிரச்சனைகள் ஏற்படும். எனவே மாத்திரை  உண்ணும் போது எதை கடைப்பிடிக்க வேண்டும்..எதனை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க....

உணவுக்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு  மிதமானதாக இருக்கும்...உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.

எது சரியான முறை ..?

வாயில் தேவையான அளவுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டு பின்னர்  தான்  மாத்திரையை போட்டு விழுங்குவது தான் சரியான முறை ஆகும்.இவ்வாறு  எடுத்துக்கொண்டால் தான் உணவு குழாயில் மாத்திரை தடை இல்லாமல் செல்லும்.பின்பு மாத்திரையை விழுங்கிய பின்னர் நான்கு முதல் ஐந்து மடங்கு   தண்ணீரை  குடிக்க வேண்டும்

அதே போன்று  மாத்திரை விழுங்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொண்டால் ஆக சிறந்தது.

மாத்திரையை நீரில் கரைத்து குடிப்பதும் நல்லது.மேலும் குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது நீரில் கரைத்து கொடுப்பது மிக நல்லது.

பாலுடன்  மாத்திரை உண்டால் என்னவாகும் தெரியுமா..?

பாலில் அதிக கால்சியல் உள்ளது. இதனுடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து  நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கி விடுமாம்.

இதனால் மாத்திரை உண்டதன் பலனும் கிடைக்காது.நோயில் இருந்து குணமாக கூட முடியாத நிலை ஏற்படும்.

அதனால், மாத்திரை உண்ட பின், இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வேண்டுமானால்  மாத்திரை  எடுத்துகொள்ளலாம்.

how to take medicine in proper way

தவிர்க்க வேண்டியவை

குளிர்ந்த  நீரில் மாத்திரை எடுத்துக் கொண்டால், மருந்தின் செயல்பாடு தாமதமாகும்.

மேலும், வயிற்றில் உள்ள நீரில் அப்படியே மாத்திரைகள் இருப்பதால் கொழுப்பு கட்டிகள் உருவாகி விடும், இன்னொரு பக்கம் உடல் பருமனும் அதிகரிக்க செய்யும்

காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.

how to take medicine in proper way

ஒரு சிலர்  மாத்திரையை அப்படியே  விழுங்குவார்கள். இவ்வாறு தண்ணீர் இல்லாமல் மாத்திரையை விழுங்குவதால், அது தவறுதலாக தொண்டையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்..

இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே பொதுவாகவே, மாத்திரைகளை  எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமோ அதன் படி உண்பது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios