விக்கல் நிற்க மூக்கை இப்படி பிடிங்க போதும்...!

ஒரு சிலருக்கு சாப்பிடும் போது விக்கல் எடுக்கும்...உடனடியாக தண்ணீர் எடுத்து குடிப்போம் அல்லவா..? ஆனாலும் விக்கல் நிற்காது அதுதான் உண்மை..

எப்போது விக்கல் வரும் தெரியுமா..?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச்சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள்.வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

மூக்கை அழுத்தி பிடித்து....

விக்கல் வரும் போது, தண்ணீர் குடித்தும் நிற்காமல் தொடர்ந்து விக்கல் வந்தால்,ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர், மூக்கின் இரண்டு துவாரங்களையும் நன்கு அழுத்திப்பிடித்து,விரைவாக தொடர்ந்து மூன்று முழுங்கு தண்ணீர் குடிங்க...அப்போது, நம் காதில் இருந்து அடைப்பு  ஏற்பட்டு விடுபடும்.பின்னர் விக்கல் வரவே வராது....

மற்ற வழிகள்

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.