Bike Parcel In Train : உரிய ஆவணங்கள் இருந்தால், எளிய முறையில் மற்றும் மலிவான விலையில் உங்கள் பைக் மற்றும் இரு சக்கர வாகனங்களை ரயில் மூலம் அனுப்பலாம்.
வேலை நிமித்தமாக அல்லது, படிப்பின் காரணமாக வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு அவர்களுடைய இருசக்கர வாகனங்களை உடன் எடுத்துச் செல்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். சிலர் வெகு தொலைவிற்கு தங்களுடைய இரு சக்கர வாகனங்களை ஓட்டியே செல்லும் நிகழ்வுகள் கூட அவ்வப்போது நிகழ்கிறது.
அதே சமயம் தனியார் பார்சல் நிறுவனங்கள் மூலம் வண்டிகளை அனுப்பும் பொழுது அதற்கு பெரிய அளவில் செலவாகும். இந்நிலையில் இதற்கு சரியான தீர்வாக அமைகின்றது இந்திய ரயில்வே. ரயில் மூலம் பைக்குகளை பார்சல் செய்யும் வசதி உள்ளதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உரிய ஆவணங்கள் இருந்தால் போதும் வண்டியின் எடை மற்றும் தொலைவிற்கு ஏற்ப பணம் பெற்றுக் கொண்டு இரு சக்கர வாகனங்கள் பார்சல் அல்லது லக்கேஜ் மூலம் கொண்டு செல்லப்படும்.
கிறிஸ்துமஸைக் கொண்டாடசிறந்த 5 நகரங்கள் இதுதான்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?
லக்கேஜ் என்றால் உங்கள் பைக்கை பயணிகள் செல்லும் ரயிலில் எடுத்துச் செல்வார்கள், அதுவே பார்சல் வடிவில் போடும் பொழுது சரக்கு ரயில்களில் தான் அவை எடுத்துச் செல்லப்படும். வண்டியின் அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே உங்களால் இந்திய ரயில்வேயில் பார்சல் செய்து இரு சக்கர வாகனங்களை அனுப்ப முடியும்.
சரி எப்படி ரயில் மூலம் பைக்கை அனுப்புவது?
முதலில் நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு பார்சல் ஆபீசில் வண்டியை ரயிலில் அனுப்புவது குறித்து கேட்க வேண்டும். அதற்காக அவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பொழுது உங்கள் கையில் உங்கள் வண்டியின் RC புக் மற்றும் இன்சூரன்சின் அசல் சான்றிதழ் இருக்க வேண்டும்.
மேலும் அந்த சான்றிதழ்களின் நகல்களை உடன் வைத்திருப்பதும் நல்லது. உரிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து விட்டு வண்டியை பார்சல் செய்ய அனுமதிப்பார்கள். பொதுவாக 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு உங்கள் பைக்கை அனுப்ப 1200 ரூபாய் வரை செலவாகும். ஆனால் வண்டியின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து அது மாறும். அதேபோல பைக்கை பேக் செய்யவும் 300 முதல் 500 ரூபாய் செலவாகும்.
முக்கியமாக வண்டியை பேக் செய்ய கொடுப்பதற்கு முன்பாக பைக்கிற்குள் எரிபொருள் இருக்கக் கூடாது. ஆகவே பெட்ரோல் டேங்க்கை காலி செய்துவிட்டே கொடுக்க வேண்டும். சில சமயங்களில் பெட்ரோல் உள்ளே இருக்கும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படலாம். ரயில்வே ஊழியர்கள் அளிக்கும் ரசீதை பத்திரமாக வைத்துக்கொண்டு நீங்கள் எந்த இடத்தில் வண்டியை எடுக்க விரும்புகிறீர்களோ அங்கு வண்டியை எடுக்கும் பொழுது ரசிதை காண்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த செடிகள் அகால மரணத்தை ஏற்படுத்தும்.. அவற்றை வீட்டில் ஒருபோதும் நட வேண்டாம்..!!
மேலும் எந்த வண்டியில் உங்களது பைக் கொண்டு செல்லப்பட உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அது அங்கு எப்பொழுது வந்து சேரும் என்பதையும் தெரிந்து கொண்டு உரிய நேரத்தில் நீங்கள் சென்று பைக்கை டெலிவரி எடுக்க வேண்டும். பைக் எடுக்க கால தாமதமானால் அதற்கும் சிறிய அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
