காதில் பூச்சி நுழைந்து விட்டதா..? தண்ணீர் விடாதீர்... உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!
 
எதிர்பாராதவிதமாக நம் காதில் ஏதாவது பூச்சி உள்ளே நுழைந்துவிட்டால் பதற்றப்படாமல் முதல் வேலையாக நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்தாலும், மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப தனிக்குடித்தனம், ஆடம்பர வாழ்க்கை செல்வாக்கு என இருந்தாலும் சாதாரண விஷயத்தில் கோட்டை விடுவது நம் கண் முன்னே பார்க்க முடியும்.

உதாரணத்திற்கு.... கூட்டு குடும்பத்தில் வசிக்கும் போது பெரியவர்களின் அனுபவமும் அவர்கள் கடந்து வந்த பல கசப்பான சம்பவங்களும், நமக்கு ஒரு பாடமாக அமையும். நாம் நம் வாழ்க்கையில் எதை கடைபிடிக்க வேண்டும்..சிக்கலான சூழ்நிலையில் எப்படி அணுக வேண்டும்.. உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நம் முன்னோர்கள் நம்முடன் இருந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்று, அவரவர் தனிக்குடித்தனம் தான் விரும்புகிறார்கள் 

அவரச கால கட்டத்தில், சாதாரண முதல் உதவி செய்வதற்கு கூட தெரியாமல் திணறுகிறார்கள். காரணம் ..பணம் பணம் என பணத்தை நோக்கி நம் மனம் செல்வதே.. அதுமட்டுமா? இது போன்ற ஒரு தருணத்தில் உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை இப்போது பார்க்கலாம்.

நம் வீட்டில் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு பூச்சி நம் காதில் நுழைந்து விட்டால் என்ன செய்வோம். இப்படி ஒரு கேள்வியை உங்கள் முன் வைத்தால்.... ஒரு சிலர் உடனே காதில் தண்ணீர் ஊற்றினால் அந்த பூச்சி மேலே மெல்ல மெல்ல ஏறி வெளியே வந்துவிடும் என சொல்வார்கள். இது சில சமயங்களில் வேலை செய்யும்.. பெரும்பாலான சமயங்களில் சிக்கலாக மாறி விடும். ஏனென்றால் காதில் தண்ணீரை ஊற்றினால் தண்ணீரில் இருக்கும் வாயு, பூச்சி வெளிவராமல் உள்ளேயே இருக்க செய்யும்.

இப்படி  ஒரு தருணத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..? 

முதலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது எண்ணெய்  எடுத்து காதில் விட வேண்டும் அல்லது உப்பு தண்ணீரை காதில் ஊற்றலாம். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தால் காதில் நுழைந்த பூச்சி உள்ளே இருக்க முடியாமல் மேலே வர முயற்சி செய்யும் அல்லது தேவையான வாயு இல்லாமல் இறந்து விடும் பின்னர் அதனை மெதுவாக நாம் அகற்றிவிடலாம். இன்னும் ஒரு சிலர் என்ன செய்வார்கள் என்றால் கையில் கிடைத்த ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு உள்ளே செலுத்தி, அந்த பூச்சியை எடுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு முயற்சிக்கும்போது பூச்சியின் உடல் பாகம் பாதி வெளியே வந்துவிடும். ஆனால் தலைப்பகுதி காதினுள்ளே இருக்க வாய்ப்பு  உள்ளது

எனவே இந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு வாழ்நாளில் எப்போதாவது இதுபோன்ற ஒரு தருணம் ஏற்படுமேயானால், நமக்கு பேருதவியாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.