how to remove the dirt from umblical cord

தொப்புளில் தேங்கி உள்ள அழுக்கு...எடுக்க முடியாமல் தவிப்பா.?

நாம் என்னதான் உடல் முழுக்க சோப்பு போட்டு அரை மணி நேரம் ஒதுக்கி நன்கு குளித்தாலும் தொப்புள் மட்டும் ஒழுக்கமாக சுத்தம் செய்ய மாட்டோம் அல்லவா...?

அதற்கு பல காரணம் சொல்ல முடியும்...

தொப்பை அதிகமாக உள்ள நபர்களுக்கு, தொப்புள் தூய்மையாக இருக்கிறதா இல்லையா என்பதை குனிந்து பார்க்க கூட முடியாது...

அடுத்ததாக, ஒரு சிலர் முகப்பவுடரை பயன்படுத்தும் போது உடல் முழுக்க பூசிக் கொள்வார்கள். பவுடர் தானே என எண்ணி எளிதில் விட்டு விடுவார்கள். ஆனால் அது அழுக்காக இருக்கும்

சரி இது போன்ற பல காரணங்கள் இருந்தாலும் மிக எளிதில் அழுக்கை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க....

மேலும் அதிக வியர்வை காரணமாக கூட தொப்புளில் எளிதில் பாக்டீரியா பூஞ்சை உருவாகும்

இதனை எப்படி அகற்றுவது என்பதை பார்காலம்.

வேப்பிலை

வேப்பிலை என்பது மிக சிறந்த கிருமி நாசினி என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்....

வேப்பிலையை நன்கு பசை போன்று அரைத்து தொப்புள் பகுதியில் தடவினால், தொற்று குணமாகி விடும். மேலும் வேப்ப எண்ணெய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

உப்பு கரைசல்

இதே போன்று கல் உப்பை தண்ணீரில் கரைத்து, அதனை ஒரு நாளைக்கு மினிமம் மூன்று முறை தொப்புள் சுற்றி தடவி வர, அழுக்கு அனைத்தும் வெளியேறும்

மேலும், தொற்று நோய் ஏதாவது இருந்தாலும் பறந்து போகும்.

வெள்ளை வினிகர்

வினிகரில் உள்ள அமிலதன்மை தொப்புளில் உள்ள தொற்று மற்றும் அழுக்கை நீக்கும் வல்லமை வாய்ந்தது. வினிகர் ஒரு பங்கு மற்றும் வெள்ளை வினிகர் மூன்று பங்கு எடுத்துக்கொண்டு நன்கு மிக்ஸ் செய்து அதனை சுமார் 15 நிமிடம் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்

கற்றாழை சோற்றுக்கற்றாழை எங்கு பார்த்தாலும் கிடைக்கும். நம் வீட்டிலேயே சிறிய தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.

தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. முகத்தில் பூசி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதனை தொப்புளில் கூட பயன்படுத்தி வரும் போது தோற்று நோய் பறந்து போகும்

மஞ்சள்

மகத்தானது மஞ்சள் என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த கிருமி நாசினி....நோயை எதிர்க்கும் திறன் அதிகம் கொண்டது.....

மஞ்சளை கூட நீரில் குழைத்து தொப்புளில் தடவை வர நல்ல முன்னேற்றம் இருக்கும்