தொப்பையை குறைக்க 5 சூப்பர் ஐடெம்ஸ்...!  

முன்பு ஒரு காலத்தில் எங்கு சென்றாலும் எதற்கு சென்றாலும் ஓடி ஓடி செல்ல வேண்டும்... உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் ... உழைத்தால் மட்டுமே சோறு என இருந்த ஒரு வாழ்க்கை முறை மாறி இன்று டிஜிட்டல் முறைக்கு மெல்ல மெல்ல மாறியவுடன் வாழ்க்கைமுறை மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் எந்த ஒரு செயலும்... அடுத்த ஒரு சில நிமிடத்தில் செய்து முடிக்க முடிகிறது. எதற்கெடுத்தாலும் வெளியில் செல்ல தேவையில்லை. உடலுக்கு அந்த அளவிற்கு வேலையும் இல்லை. இன்று ஒரே இடத்தில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து விட்டாலே போதும், எந்த ஒரு காரியத்தையும் மிக சுலபமாக இருந்த இடத்திலிருந்து செய்து முடித்துவிடலாம். அதற்கு தேவை எல்லாம் சிந்தனையும் மூளையின் செயல்பாடு மட்டுமே.. இதன் காரணமாக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால், தேவையில்லாத உடல் பருமன் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

முன்பெல்லாம் அந்த அளவிற்கு உடற்பயிற்சிக்கூடம் இருப்பதே கிடையாது. காரணம் தினமும் நாம் செய்யும் வேலையே பெரும் உடற்பயிற்சியாக அமைந்துவிடும். தேவையில்லாத கொழுப்பு உடலில் தங்காது. அதன் காரணமாக உடல் எடையையும் சீராக இருக்கும். ஆனால் இன்று அப்படியா? ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் அதிக உடல் பருமன் ஏற்படும்... தொப்பை அதிகரிக்கும்.

இதற்காக மருத்துவர்களை அணுக வேண்டிய சூழலும் இருக்கின்றது. ஒரு சிலர் எப்படியாவது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து தினமும் உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர். ஒரு சிலர் யோகா மூலம் தொப்பையை எப்படியாவது குறைக்க முடியும் என முயற்சி செய்துவருகின்றனர்.தொப்பையை குறைக்க மிக முக்கியமாக ஓரளவிற்கு உதவி செய்யும் உணவுப் பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

எழுமிச்சை மூலமாக ஜூஸ் அல்லது உணவில் சேர்த்துக் கொள்வது, அதே போன்று முட்டையை தேவையான அளவிற்கு சாப்பிடலாம்...

சமைக்கும் போது தேவையான அளவிற்கு மிளகாய் பயன்படுத்திக் கொள்ளலாம். பருப்பு சாம்பாரில் அதிக அளவில் மிளகாய் சேர்த்து சாப்பிடலாம். பாதாம், கீரை வகைகள், சால்மன் மீன், உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் தொப்பையை வெகுவாக குறைக்க பெரிதும் உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.