முதுகு வலியை குணப்படுத்த புதியதாக சக்கரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நபர்கள், நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நபர்கள் மேலும் பெரியவர்கள் என அனைவருமே முதுகுவலியால் மிக எளிதாக பாதிக்கப்படுவார்கள்.

இதற்காக பல விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், அதனால் சிறிதளவு பயன் மட்டுமே உண்டு. ஆனால் இதற்கு முற்றிலும் தீர்வு கிடைத்துவிடுமா என்றால் இல்லை. ஆனால் தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளையம் ஒன்று முதுகுவலியை முற்றிலும் சீராக்கி விடுகிறதாம். 

இந்த சக்கரத்தை முதுகின் கீழ் வைத்து லேசாக உருட்டினால் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கிவிடும். இதேபோன்று தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் முதுகு தண்டு உள்ளிட்ட அனைத்து பக்கமும் நன்கு வலுப்பெற்று இரத்த சுழற்சியும் அதிகரித்து முதுகுவலி என்ற பிரச்சினையே இருக்காது. காரணம் இந்த சக்கரத்தை பயன்படுத்தும் போது நான்கு திசைகளிலும் தேவையான அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் தண்டுவடம் சீராக இயங்குகிறது.

இந்த சக்கரத்தை அதிக உடல்பருமன் கொண்டவர்களும் பயன்படுத்தலாம். அதற்கேற்றவாறு நல்ல உறுதி வாய்ந்த சக்கரத்தையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6 அங்குலம் 10 அங்குலம் 12 அங்குலம் என மூன்று அளவுகளில் இந்த சக்கரத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6 அங்குலத்தை அதிகமாக வலி இருக்கும் போது பயன்படுத்தினால், நிவாரணம் கிடைக்கும். கால்கள் கழுத்து மற்றும் முதுகு வலியை போக்கலாம். இதே போன்று 12 அங்குல சக்கரத்தை மொத்த முதுகு தண்டிற்கும் பயன்படுத்தலாம்.