தேனுடன்  இதை கலந்து முகத்தில் தடவி விடுங்கள் போதும்..! 

நம் முக அழகை பேணிக் காக்க ஒருசிலர் அழகு நிலையம் சென்று பேஷியல் செய்துகொள்வதும் அதற்காக அதிக பணத்தை செலவிடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் ஃபேஷியல் செய்யவில்லை என்றால் ஏற்கனவே இருந்த மாதிரியான முகத்தோற்றம் வந்துவிடும். 

இதனை தொடர்ந்து மீண்டும் ஃபேசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவ்வாறு செய்யும் பேஷியலில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸ் ஏராளம். காலப்போக்கில் நம் சருமம் சுருக்கங்களை சந்திக்க நேரிடும். ஆனால் இன்றைய இளசுகள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இப்போதைக்கு நன்றாக இருந்தால் போதும் என நினைத்து அழகு நிலையத்திற்கு சென்று சர்மத்தை பேணிக்காப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள்.

இன்னும் ஒரு சிலரோ கடையில் விற்கக்கூடிய பல்வேறு பொருட்களை வாங்கி முகத்தில் தடவி அதன் மூலம் ஏதாவது ரிசல்ட் கிடைக்குமா என நினைக்கின்றார்கள். ஆனால் இவை அனைத்தையும் மீறி இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய அதுவும் நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து இயற்கையான முறையில் பேசியல் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

சிறிதளவு கடலை மாவுடன் தேவையான அளவு தயிரை சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும் பின்னர் எலுமிச்சை சாறு 5 சொட்டுகள், கொஞ்சம் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து பாருங்கள். ஒரு பேஷியல் பேக் ரெடியாக இருக்கும்.

இதனை தினமும் பயன்படுத்தினாலும் சரி வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தினாலும் சரி பயன்படுத்திய உடனே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதனை தொடர்ந்து செய்து வர கண்டிப்பாக நம் முகம் பளபளப்பாக காணப்படும். தாராளமாக இந்த முறையை நம் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாம்.