உங்கள் முடி "ஷைனிங்கா" இருக்க வேண்டுமா..? சரியாக 20 நிமிடத்தில்.. நம் வீட்டிலேயே..! 

உங்கள் முடி ஆரோக்கியமில்லாமல் பொலிவிழந்து காணப்படுவதால் மனக்கவலையில் உள்ளீர்களா நீங்கள்?  கவலை வேண்டாம் இனி உங்க முடி பளபளக்க போகுது அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆப்பிள் 1, எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சோள மாவு 1 ஸ்பூன், ஆப்பிள் சீடர் வினிகர் 2  ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் ஆப்பிளை சிறிது சிறிது துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை நன்கு அரைத்து சாற்றை பிழிந்து கொள்ளவும். இதில் ஆப்பிள் சீடர் வினிகர், சோள மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை தலைமுடியின் நுனி வரை தேய்த்து கொள்ளவும்.

பின்னர் சுமார் 30 நிமிடம் அப்படியே விடுங்கள். அதன்பின் சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துகொண்டால் நம்முடைய முடி மிகவும் பளபளப்பாக இருக்கும்.