Asianet News TamilAsianet News Tamil

இயற்கையான ஆன்டிபயாடிக் மெடிசின் வீட்டிலேயே செய்வது எப்படி ..?

how to-make-antibiotic-medicine-naturally
Author
First Published Jan 17, 2017, 4:17 PM IST

இயற்கையான  முறையில்   வீட்டிலேயே தயாரிக்கலாம்  ஆன்டிபயாடிக்

ஆன்டிபயாடிக் என்பது நமது உடலில் ஆன்டிபாடி என்ற நோய் எதிர்ப்பு செல்கள் குறையும்போது, தரப்படும் மருந்து. இது நோய் எதிர்ப்பு செல்களுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு சப்ஸ்டிடியூட்.

ஆனால் ஆன்டிபயாடிக் உடலுக்கு நல்லதல்ல. தொடர்ந்து ஆன்டிபயாடிக் உபயோகித்தால் சிறு நீரகம், கல்லீரலுக்கு பக்க விளைவுகளை தரும். ஆகவே கூடுமானவரை உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி விட ஊக்கப்படுத்துங்கள்.

நமது இயற்கை மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டிவிடும் எண்ணற்ற மருந்துகள் இருக்கிறது. துளசி, மஞ்சள், மிளகு, சுக்கு, இஞ்சி மற்றும் பூமியில் மிகச் சாதரணமாக விளையும் பல மூலிகைகள் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளன.

இயற்கை ஆன்டிபயாடிக் தயாரிக்கும் முறை:

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் - 700மி.லி

பூண்டு நறுக்கியது - கால் கப்

வெங்காயம் - கால் கப்

மிளகு - 2

இஞ்சி துருவியது - கால் கப்

குதிரை முள்ளங்கி - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஆப்பிள் சைடர் வினிகர் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை வடிகட்டி, ஒரு குடுவையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மிக நன்றாக குலுக்குங்கள்.

பின்னர் இந்த கலவையை ஒரு வெளிச்சம் பூகாத இருளான இடத்தில் வைத்துவிடுங்கள். 2-6 வாரங்கள் வரை வைக்கவும். அதன் பின் வடிகட்டி அதனை தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.

உபயோகிக்கும் அளவு:

நோய்வாய்ப்படும்போது இந்த மருந்தை ஒரு ஸ்பூன் குடித்தால் உங்கள்காய்ச்சல் இருமல் சளி போன்ற நோய்கள் குணமாகி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios