Curly hair: சுருட்டை முடி அழகுதான். இருப்பினும், பராமரிக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் சூப்பரான டிப்ஸ் தெரிந்து கொள்வோம்.

சுருட்டை முடி அழகுதான்...இருப்பினும், பராமரிக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் சூப்பரான டிப்ஸ் தெரிந்து கொள்வோம்.

தலைமுடியை பராமரிக்க பல வித பிரச்சனைகள் ஏற்பட கூடும். குறிப்பாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு இந்த தலைமுடி பிரச்சனை அதிகமாக இருக்கும். இவர்களால் சரியாக தலைக்கு குளிக்க முடியாது, தலையை சரியாக வார முடியாது, மற்றும் பராமரிப்பதில் சிரமம் இருக்கும். இப்படி பல சிக்கல்கள் உள்ளது. சுருட்டை முடி உள்ளவர்கள் பராமரிக்க தேவையான சில முக்கிய விஷயங்களை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

சுருட்டை முடியை பராமரிக்க உதவும் சூப்பரான டிப்ஸ்...

1. சுருட்டை முடி இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிக்கக் கூடாது. இதனால் கூந்தல் சீக்கிரம் வெடித்துவிடும். வாரம் மூன்று அல்லது இருமுறை தரைக்கு குளித்தால் போதுமானது.

2. சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தலைக்கு குளித்த பிறகு முடி சீக்கிரம் காய்ந்து விடுவதில்லை. எனவே இதற்காக ப்ளோ டிரையர்களை பயன்படுத்துவார்கள். அதிகமாக ப்ரோ டிரையர் பயன்படுத்தினால் முடி மிகவும் வறட்சி ஆகும். இதனால் முடியின் வேர் மிகவும் வலுவிழந்து போய்விடும்.

3. சுருட்டை முடி இருப்பவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிக சிரமமுண்டு. அடிக்கடி சிக்கல் விழுந்துவிடும். வேகமாக வறண்டு விடும். நுனிபிளவு அதிகமாக ஏற்படும். அடர்த்தியாக காணப்பட்டாலும், தலைமுடிக்கு இந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராது. 

4. சுருட்டை முடி இருப்பவர்கள் செய்யும் தவறு எந்தவிதமான ஷாம்புவும் உபயோகப்படுத்துவதுதான். நீங்கள் வறண்ட கூந்தலுக்கான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.

5. சுருட்டை முடி உள்ளவர்கள் எல்லோரும் பயன்படுத்துவது போன்று சிறிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்துவது நல்லதல்ல. இதனால் மேலும் சிக்கல் அதிகாரிகரிக்கும். எனவே பெரிய பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்துவது நல்லது. அதே போன்று தலைக்கு குளித்த உடனேயே முடியை சிக்கல் எடுக்க வேண்டாம். இப்படி செய்தால் முடி உதிர்வு அதிகரிக்கும்.

6. சிலருக்கு சுருட்டை முடி அடர்த்தியாக இருக்கும். இதனால் பிடிக்கு அடங்காமல், பம்மென்று இருக்கும். இவர்கள் தலைக்கு அலங்காரம் செய்வதற்கு முன், சிலிக்கான் சீரம் தலையில் கூந்தலில் தடவினால், கூந்தல் அடங்கும். நீளமாக தெரியும். இதனால் உங்கள் விருப்பப்படி சிகை அலங்காரங்கள் செய்யலாம். ஆனால் சிலிக்கான் சீரத்தை ஸ்கால்ப்பில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

7. தலைக்கு குளிக்கும் போது தலையை மிகவும் கடுமையாக தேய்ப்பது. இப்படி தேய்த்தால் முடி உடைதல், முடி கொட்டுதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகும். அதே போன்று தலை முடியின் மென்மையையும் குறைந்து விடும். எனவே தலையை வேகமாக தேய்க்காமல், விரல்களை கொண்டு மெதுவாக தேய்த்து குளியுங்கள்.

8. குளிர்ந்த நீரில்தான் தலையை அலச வேண்டும். சுடு நீரில் அலசக் கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவறு. கூந்தலுக்கு உயிர் கிடையாது. அதற்கு குளிர்ந்த நீர் மற்றும் சுடு நீர் இரண்டும் ஒன்றுதான். பெரிய மாற்றங்கள் வராது.