Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர்களே உஷார்! உங்கள் டீனேஜ் பிள்ளைகளை கையாளும் வழிமுறைகள்...! இந்த விஷயங்களில் கவனம் தேவை...

பிள்ளைகள் வளரும் பருவங்களில் டீன் ஏஜ் பருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கும் கடினமான பருவமாகும். 

How to handle your teenage child
Author
Chennai, First Published Jan 16, 2022, 2:16 PM IST

குழந்தைகள் பிறக்கும், போதும் சரி, வளரும் போதும் சரி, திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய பிள்ளைகளை மனதளவில் குழந்தைகளாகவே பெற்றோர்கள் கருத்தில் கொள்வர். ஆனால், குழந்தைகள் வளரும் பருவத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் பிள்ளைகளிடம் வெவ்வேறு  குணாதிசயங்கள் தோன்றும். குறிப்பாக, பிள்ளைகள் வளரும் பருவங்களில் டீன் ஏஜ் பருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கும் கடினமான பருவமாகும். குழந்தையாகவும் அல்லாமல் வாலிபராகவும் அல்லாமல், இடைப்பட்ட ஒரு நிலையில், பதின்பருவ காலத்தில் ஒவ்வொரு பிள்ளையும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும். 

How to handle your teenage child

சின்ன சின்ன விஷயங்கள் கூட கோபம் வரும்:

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள், அவர்களை அதிக சென்சிட்டிவ்வாக மாற்றிவிடுகிறது. உதாரணமாக, நீங்கள் சாதாரணமாக ஏதேனும் சொன்னால் கூட, அதை எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்காது. சின்ன சின்ன விஷயங்கள் கூட சங்கடப்படுத்துவது போல அமையும். எனவே, உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படியெல்லாம் சங்கடப்படுத்த கூடாது அல்லது எதுவெல்லாம் சங்கடப்படுத்தும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 பொது இடங்களில் பிள்ளைகளின் மீது உங்கள் அக்கறை மற்றும் அன்பை தெரிவிப்பதாகவும். அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்வது, அணைப்பது உள்ளிட்டவையாகும். ஆனால் வளரும்  டீன் ஏஜ் பிள்ளைகள் பலருக்கும் பொது இடங்களில் ஒரு வித சங்கடத்தை உருவாக்கும். 

உறவினர்கள் முன்னிலையில் அட்வைஸ் பண்ணுவது:

உறவினர்கள் முன் உங்கள் குழந்தையை திட்டுவது அல்லது அவர்கள் செய்தது தவறு மிக நீண்ட நேரம் அட்வைஸ் பண்ணுவது ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தாலும் அல்லது நீங்கள் விரும்பாத எதைச் இருந்தாலும் அவர்களுக்கு அதைப் புரிய வைக்க, தனியே எடுத்துச் சொல்ல வேண்டும். எப்போதுமே மற்றவர்களு முன் குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவது, திட்டுவது போன்றவை அவர்களை அவமானப்படுத்துவது  போன்று உணர வைக்கும்.

How to handle your teenage child

பிள்ளைகளுக்கான தனிமை அவசியம்:

குடும்பம், படிப்பு, என்று மாணவர்கள் நேரம் செலுத்துவது முக்கியமாக இருந்தாலும் குழந்தைகள் தனக்கெனறு,தான் விரும்பும் செயலை செய்வதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். கரோனா காலகட்டத்தை தவிர்த்து, நண்பர்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும். எப்பொழுதுமே பெற்றோராகிய நீங்கள் அவர்களை கவனித்துக் கொண்டே, கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.

 பெற்றோர்-பிள்ளைகளின் நட்பு வெளிப்படையாக தெரிய வேண்டாம்:

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக பழக வேண்டும் என்பது அவசியம்தான். அது அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படையாக பகிரவும் உதவும். ஆனால், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையே உள்ள நட்பு உங்களுடைய தனிப்பட்ட உறவாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய நண்பர்கள் அல்லது சக மாணவர்களுடன் இருக்கும்பது நீங்கள் அதிகப்படியான நட்புணர்வோடு இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டாம். அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்கும் உங்கள் டீஜென் பிள்ளைகளுக்கும் எவ்வளவு புரிதல் இருந்தாலும் நீங்கள் அவர்களுடைய ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பது அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொண்டு,  பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios