கண் இமைகளில் அடர்த்தியாக முடி வளர வேண்டுமா ..? ஒரு வாரத்திற்கு இதை பயன்படுத்துங்க போதும்..! 

நம் முக அழகில் மிக மிக முக்கியமானது நம் கண்கள். ஒருவருடைய முகத்தை பார்க்கும்போது நம் கண்ணே அடுத்தவரின் கண்ணை தான் முதலில் நோக்கும். 

கண் இல்லை என்றால் இந்த உலகம் நமக்கு எவ்வளவு வெறுமையாக தோன்றும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படியான முத்தான இரண்டு கண்களை அழகாக பேணிக்காப்பது நம்முடைய கடமை அல்லவா? ஒரு சிலருக்கு கண் இமைகள் அடர்த்தியாக இருக்காது. அதனால் ஒரு சிலர் வருத்தம் அடைவார்கள். எதைஎதையோ முயற்சி செய்து பார்ப்பார்கள். ஆனால் மிக எளிதாக கண் இமைகளை அடர்த்தியாக வளர்க்க முடியும் என்பதை தெரிந்துகொண்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும் அல்லவா?

ஆமணக்கு எண்ணெயை தொடர்ந்து கண் இமைகளுக்கு வைத்து வந்தால் இயற்கையான அடர்த்தியான கண் இமைகளை பெற முடியும். ஆமணக்கு எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும்  anti-fungal கொண்டுள்ளது. இதோடு புரோட்டீன், விட்டமின் ஏ, ஒமேகா 9, கொழுப்பு அமிலம் என அனைத்து சத்தும் இருக்கின்றது. இதனால் இயற்கையாகவே முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய சக்தி வாய்ந்தது ஆமணக்கு எண்ணெய். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

முகத்தை நன்கு கழுவி விட்டு குறிப்பாக கண்களை மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு காட்டன் எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களை சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு அவனுக்கு எண்ணையை எடுத்து கண்களை சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தம் செய்துவிட்டு மஸ்காரா-ப்ரஸ் கொண்டு எண்ணெயில் முக்கி கண்களின் மேல் கீழ் இமைகளில் தடவி விடவும். இப்படி இரவு நேரத்தில் தூங்கும் முன் செய்து வந்தால் எண்ணெய்  முழுவதும் சருமத்தை நன்கு மூடி நல்ல பலனை கொடுக்கும்.

பின்னர் மீண்டும்  காலை எழுந்தவுடன் காட்டனில் ரோஸ் வாட்டர் தொட்டு நீக்கிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண் இமைகள் நன்கு வளரும்.