how to do poojai for siva rathiri in home itself
வீட்டில் சிவராத்திரி..! "இந்த நேரத்தில்" வில்வ இலை தூவி தீபாராதனை காட்டுங்கள்...!
மகா சிவராத்திரியான இன்று,வீட்டில் எவ்வாறு பூஜைகள் செய்ய வேண்டும் என்பது கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
வீட்டில் சிவலிங்கம் வைத்து முறையாக வழிபட்டு வருபவர்களாக இருந்தாலோ அல்லது நடராஜர் போட்டோ வைத்து வழிபட்டு வந்தாலோ நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான்.....
பூஜைகள்
சிவராத்திரியான இன்று பகலில் சாப்பிடாமல்,மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் தொடங்க வேண்டும்.
சரியான நேரம்
மாலை 6.30, இரவு 9.30, 12.30, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்டினாலே போதும்.
மந்திரங்கள் ஓத ‘சிவாய நம’
‘சிவாய நம’ என்று சொல்லி கடவுளை வழிபடலாம்.மந்திரங்கள் தெரிந்தாலோ அல்லது சிவன் பற்றிய கதைகள் ஒருவர் சொல்ல மற்றவர்கள் காத்து கொடுத்து கேட்டாலே போதுமானது..இறை அருள் கிடைத்து நன்மைகள் வந்து சேரும்..
