வயிற்று பூச்சிகளை அழிக்க சிறந்த "பிரண்டை துவையல்"..! இனி மாத்திரையை ஓரமாக  வையுங்க...! 

நம் உடல் நலனில் சிறிய ஒரு சாதாரண பிரச்சனை என்றாலும் உடனடியாக நம் நினைவுக்கு வருவது மருத்துவர் தான். ஒரு முதலுதவி செய்வது குறித்தும், உணவே மருந்து மருந்தே உணவு என்பதை புரிந்துகொள்ள முடியாமலும் அல்லல் படுவது என்னவோ இந்த தலைமுறையினர் தான்...

உதாரணத்திற்கு, குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கக்கூடிய பூச்சிகள் அழிக்க பிரண்டை இலையை துவையல் மட்டுமே போதுமானது. 

இஞ்சி மற்றும் பிரண்டை இவை இரண்டையும் சேர்த்து துவையல் செய்ய முடியும். அதற்கு தேவையானது என்ன தெரியுமா..?

பிரண்டை துண்டுகள், புளி, இஞ்சி  - போதுமான அளவு 
உளுத்தம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - கொஞ்சம் 
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்யும் முறை..! 

பிரண்டை,இஞ்சி, தோலை நீக்கி,சுத்தம் செய்துகொள்ளவும் 

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக  வதக்கி, அதனுடன் ஏற்கனவே வறுத்து வைத்திருந்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு நன்கு அரைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் புளி மற்றும் கருவேப்பிலையும் சேர்த்து நன்கு அரைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சுவையின் காரணமாக அவர்களும் நன்கு சாப்பிடுவார்கள்.வயிற்று பூச்சிகளை  அழிக்க தேவை இல்லாமல் மாத்திரைகளையும் எடுக்க வேண்டாம்.