நேர் வழியில் சம்பாதித்த ஆவணம் இல்லா பணத்தை டெபாசிட் செய்வது எப்படி ..?

தற்போது, இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கியில் டெபாசிட் செய்யலாம், அதற்குண்டான ஆவணங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை என செய்திகள் தெரியவருகிறது.

ஆனால், நேர் வழியில் சம்பாதித்து, அதிக பணம் வைத்திருப்பவர்கள்,உரிய ஆவணம் இல்லாமல் இருகின்றனர்.

அதாவது, நேர்மையான முறையில் சம்பாதித்து அதிக பணம் வைத்திருப்பவர்கள், வங்கியில் டெபாசிட் செய்த பின், என்றாவது ஒரு நாள் என்கொய்ரி வந்தால், நீங்கள் செய்ய வேண்டியது........

1.ஆட்டோ ஓட்டுநர் – ஆட்டோ ஓட்டும் உரிமத்தை காமிக்கலாம்

ஒருவர் தான் ஆட்டோ ஓட்டி சம் பாதித்த ரூ.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால் அவர் தனது ஆட்டோ ஓட்டுநர் உரிமத்தைக் காட்டி பணத்தை டெபாசிட் செய்யலாம்.

2..ரியல்எஸ்டேட் முகவர்கள், முகவர் தொழில் மூலம் கிடைத்த தரகு தொகையை, நிலம் விற்றோர், வாங்கியோரிடமிருந்து கடிதம் பெற்று, வங்கியில் டெபாசிட் செய்யலாம்.

3. விவசாயிகள் :

விவசாய நிலத்தில் விவசாயம் செய்ததன் மூலம் சம்பாதித்தது என்பது குறித்த ஆதாரத்தை அளிக்கலாம். குத்தகை விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை ஆதாரமாக தரலாம்.

4. சிறு வணிகர்கள் :

மளிகைக் கடைக்காரர்கள், தினசரி வருவாயை வங்கியில் செலுத்தும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்கள் கையில்தான் பணம் வைத்திருப்பார்கள். அவர்கள் விளக்கக் கடிதம் ஒன்றை வங்கியில் செலுத்தினால் போதும். அவரவர் செய்து வரும் தொழில் தொடர்பாக விளக்கக் கடிதம் அளிக்கலாம்.

இதுபோன்ற நிலையில், ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால், அனைவரது பெயரிலும் பிரித்து போடலாம். 

இன்றைய சூழலில் அதிக தொகை இருந்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்வதைத் தவிர வேறு சட்டபூர்வ வழிகள் இல்லை என்பதை அனைவரும்