Asianet News TamilAsianet News Tamil

தொப்பையை ஒரே வாரத்தில் இப்படி இறுக்க முடியும்..! அதுக்கு நீங்க இப்படி செய்யுங்க..!

நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள், உடலை சரியாக பேணி காப்பதில் அக்கரை இல்லாமல் போவது.மூளைக்கு மட்டும் அதிக வேலை கொடுக்கும் நம்மவர்கள், உடல் உழைப்பிற்கு அதிக வேலை கொடுப்பது இல்லை. இவ்வாறான காரணத்தினால் சாதரணமாக வளர்ந்து விடுகிறது தொப்பை.

how to control belly within a week
Author
Chennai, First Published Mar 9, 2019, 7:13 PM IST

நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள், உடலை சரியாக பேணி  காப்பதில் அக்கரை இல்லாமல் போவது. மூளைக்கு மட்டும் அதிக வேலை கொடுக்கும் நம்மவர்கள், உடல் உழைப்பிற்கு அதிக வேலை கொடுப்பது இல்லை. இவ்வாறான  காரணத்தினால் சாதரணமாக வளர்ந்து விடுகிறது தொப்பை.

இந்த தொப்பையை எப்படி குறைப்பது என நாள்தோறும் சிந்தனையில் மட்டும் பீல் செய்துக்கொண்டிருக்கும் நம்மவர்கள் சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இது போன்று முயற்சி செய்தது உண்டா என்றால் இல்லை தானே. .வாங்க அது என்ன அப்படிப்பட்ட சிறப்பு மேஜிக் என்று பார்க்கலாம்.

தலை வலிக்கு மட்டுமே பயன்படும் வலி நிவாரணி தைலம். நினைவிருக்கிறதா..? ஆமாம்...தைலம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது தொப்பையை குறைக்க....

how to control belly within a week

தேவையானவை

கற்பூரம்

பேக்கிங் சோடா

அல்கஹால்

தைலம்

எப்படி தயார் செய்வது என தெரியுமா ..?

முதலில் கற்பூரத்தை நன்கு பொடித்து, அதில் பேக்கிங் சோடா, தைலம், ஆல்கஹால் இவை அனைத்தும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்

இதனை மாலை நேரத்தில் அல்லது காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதாவது, இந்த க்ரீமை கொழுப்பு அதிகம் உள்ள இடத்தில் தடவி சுழற்சி முறையில் நன்கு தேய்த்து பின்னர் அந்த பகுதியை சுற்றி பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி விட வேண்டும். இதன் பின்னர் சுமார் 30  நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் தொப்பை  குறைந்து விடும்.

how to control belly within a week

இது தவிர, இரவில் படுக்கும் போது இவ்வாறு அந்த க்ரீமை தடவி பின்னர் பிளாஸ்டிக் கொண்டு மூடி அப்படியே உறங்கிவிட்டு காலை எழுந்த வுடன் சுத்தம் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு சில நாட்கள் செய்து வந்தாலே தெரியும் தொப்பை குறைவது....

அதே வேளையில் சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இவை இரண்டையும் மேற்கொள்வது ஆக சிறந்தது.இதை தவிர்த்து உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களை கொண்டு வருவது நல்லது 

Follow Us:
Download App:
  • android
  • ios