நம் வீட்டில் ஏற்றும் தீபம் என்றுமே நம்முடைய வாழ்க்கையில் ஒளிமயமானதாக இருக்கும்..

எந்த ஒரு கெட்ட சக்திகளும் அண்டாது செல்வ செழிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிவகை செய்யும்...

அவ்வாறு தீபம் ஏற்றும் போது எந்த இடத்தில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது

பொதுவாகவே,பூஜை அறையில் விளக்கேற்றுவதும், வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைப்பதும் தான் பழக்கத்தில் உள்ளது அல்லவா...

ஆனால் நம் வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் விளக்கேற்றி வைப்பதில் பெரும் அளவில், நன்மைகள் ஏராளம்

கோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்

திண்ணைகளில் - நான்கு விளக்குகள்


மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்

நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்

வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்


முற்றத்தில் - நான்கு விளக்குகள்

பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.

சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.