தீபாவளிக்கு ஏன் ஆட்டுக்கறி எடுக்கிறோம் தெரியுமா.? அடடே.. வரலாற்றில் இப்படியொரு விஷயம் இருக்கா..

தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு பலகாரங்களோடு ஆட்டுக்கறி, கோழிக்கறிக்குழம்பு சாப்பாடு சாப்பிடுவது வழக்கம். ஆனால் தீபாவளி அன்று அசைவ சாப்பாடு சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

How did the South Indian custom of eating non-vegetarian food on Diwali come about?-rag

நாடு முழுவதும் வாழும் இன்று தீபாவளியை முன்னிட்டு இந்துக்கள் பட்டாசுகளை வெடித்து கோலாகளமாக பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, பூஜை செய்து, வீட்டில் சமைத்த அல்லது கடைகளில் வாங்கிய இனிப்பு பலகாரங்களை சுவைத்து, பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். 

இன்று அதிகாலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதேபோல புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். வீட்டில் சமைத்த உணவு பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை மாற்று மதத்தினருக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்கள்.

தீபாவளி தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெறும் சந்தைகளில் ஆடு மற்றும் கோழிகள் எல்லாம் கோடி கணக்கில் விற்பனையானது என்று செய்திகளில் வருவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். இந்த உணவு முறை மாற்றம் தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன் ? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. 

இதற்கு விளக்கம் அளித்துள்ள தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவன், “தீபாவளிக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜயநகர பேரரசு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு தீபாவளி என்றொரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடவில்லை என கூறியிருக்கும் அவர், சங்க இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் எதனையும் பார்க்க முடியாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தீபாவளி வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான பண்டிகை, இது புராணக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட பிராமணிய பண்டிகை என்று அவர் கூறியுள்ளார். தமிழர்கள் சங்க இலக்கிய காலம் தொட்டே கொண்டாட்ட காலத்தில் அசைவ உணவுகளை உண்பதை வழக்கமாக கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 

தீபாவளி தமிழர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்தில் இருக்கும்போதும், விருந்தினரை உபசரிக்கும்போதும் புலால் உணவுகளை வைத்து அவர்களுக்கு விருந்து அளிப்பதையே பெருமையாக கருதியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சி தான் இப்போதும் எந்தவொரு கொண்டாட்டத்தின்போதும் இயல்பாகவே அசைவ உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தீபாவளி பண்டிகை என்பதே விநாயகர் சதூர்த்தி போல் தமிழ்நாட்டில் இறக்குமதியான பண்டிகையே தவிர, இது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை எல்லாம் கிடையாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு விருந்து கொடுக்கும்போது அதனை சிறப்பாக கொடுப்பதற்கு இறைச்சி கலந்த உணவு அளிப்பதை கவுரமாக கருதும் வழக்கம் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ளது.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios