உணவகங்களில்  வாடிக்கையாளர்களை கவர ஏதாவது வித்தியாசமாக செய்வது வழக்கம். பெரும்பாலன உணவகங்களும் சுவையான உணவை தயாரிப்பதால் உணவகத்தின் தோற்றத்தில் ஏதாவது புதுமையை கொண்டு வர வேண்டும் என்ற வகையில் இது போன்ற உணவகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. 

அந்த வகையில் ஒரு உணவகத்தில் பில் போடும் கேஷ் கவுண்டர் அமைந்திருக்கும் விதம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

பில் போடும் கவுண்டரில் , ஒரு கம்ப்யூட்டர், மிட்டாய் , கார்ட் ஸ்வைப்பர் போன்ற உபகரணங்கள் தான் இருக்கும். அத்துடன் கொஞ்சம் டிஷ்யூ பேப்பரும் இருக்கும்.  ஆனால் ஒரு உணவகத்தில் அந்த கேஷ் கவுண்டரை கிரியேட்டிவாக அமைப்பதாக கூறி , வேடிக்கையான ஒரு செயலை செய்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட பிரியாணி செய்யும் அண்டா மாதிரியான ஒரு பாத்திரத்தினுள் பில் போடும் உபகரணங்கள் மற்றும் கேஷியரின் இருக்கை என எல்லாம் அமைந்திருகிறது. அந்த அண்டாவையும் அடுப்பின் மேல் வைத்திருக்கின்றனர். 

அதனுள் அமர்ந்து கூலாக பில் போடுகிறார் பில்லிங்கில் இருக்கும் அந்த நபர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த புகைப்படம் தான் இணையத்தில் தற்போது பிரபலமாகி இருக்கிறது.  அடுப்பு , அண்டா என எல்லாம் ஒரிஜினல் மாதிரியே இருப்பது இதன் சிறப்பு. 

என்ன தான் கிரியேடிவிட்டினாலும் அதற்கும் ஒரு அளவு வேண்டாமா? பிரியாணி அண்டாவுக்குள்ள ஒரு மனுஷனை உக்கார வெச்சு பில் போடுறீங்களே? நல்லவேளை ஒரிஜினாலிட்டிங்கற பேரில் அடுப்பை பத்த வைக்காத வரைக்கும் நல்லது என இந்த படத்தை பார்த்து கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.