மத்திய பிரதேசத்தில் ஷாஜாபூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு முதியவர் படுக்கையில் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் முதியவர் ஒருவர் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ள சம்பவம் தொலைக்காட்சியில் வெளியானது. ஏற்கனவே கொரோனா சிகிச்சையில் அரசின் நடவடிக்கைகளை மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இதுபோன்ற காட்சிகள் அவர்களுக்கு அல்வா போல் அமைந்திருக்கிறது. மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா கோர பசியில் தங்களது ஆட்டத்தை தற்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அந்த முதியவர் அமைந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில்  ஷாஜாபூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு முதியவர் படுக்கையில் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக  மருத்துவ சிகிச்சைக்காக ஷாஜாபூர் பகுதியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ராஜ்கர்' மாவட்டத்தில் இருந்து வந்துள்ளார். 

சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் அவரது குடும்பம் பணம் செலுத்தியது.சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது மருத்துவமனை சார்பில் ரூ.11,270 கூடுதலாக செலுத்துமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் முதியவரின் குடும்பம் அந்த பணத்தை செலுத்தவில்லை. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் முதியவர் வெளியே  சென்று விடக்கூடாது என்பதற்காக சிகிச்சை அளித்த படுக்கையிலேயே கைகால்களை கட்டி போட்டனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.இதைதொடர்ந்து, மத்திய பிரதேச முதல்வர் "சிவராஜ் சிங் சவுகான்" இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.