Astrology Today: ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும்.அதன்படி,12 ராசிகளுக்காக இன்றைய ராசி பலன்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும்.அதன்படி,12 ராசிகளுக்காக இன்றைய ராசி பலன்கள்.
ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது.
மேஷம் (Aries):
கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும்.குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகளை மனதில் வரும்.
ரிஷபம் (Taurus):
குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் சற்று கவனம் தேவை புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை தள்ளி வைப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கைத்துறையில், இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு.
மிதுனம் (Gemini):
இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் என்றாலும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு தீர வாய்ப்பு உள்ளது. விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவது குடும்ப நிம்மதியைப் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்களுக்கு வெற்றி அடைவர்.
கடகம் (Cancer):
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையே வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம் (Leo):
உங்களுக்கு இன்றைய நாளில் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.குடும்பத்தில் அமைதி தவழும் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றியடையும்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் முன்னெடுப்பது வெற்றிகள் முடிவடையும்.சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சடங்குகளைப் பற்றி திட்டமிடுகிறீர்கள். இவற்றில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நாள் ஆகும்.
கன்னி (Virgo):
உங்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவற்றில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும் ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம் (Libra):
உங்களுக்குஅன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டு. உங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்தாலோசிக்க இன்று நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் உண்டாகும். ஒருசிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அமைப்பு உண்டாகும்.
விருச்சிகம் (Scorpio):
உங்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்துவரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று காலதாமதமாக காண்பார்கள்.
தனுசு (Sagittarius):
உங்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். உயர் கல்வியை நோக்கி வெளிநாடு செல்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமான நாளாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் எல்லா புது முயற்சிகளும் வெற்றியடைய இறையருள் துணை நிற்கும். விநாயகப் பெருமானின் வழிபாடு விக்கினங்களை தீர்த்து வெற்றியைத் தரும்.
மகரம் (Capricorn):
உங்களுக்கு இன்றைய நாளின் முற்பகுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள் தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.
நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.
கும்பம் (Aquarius):
உங்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாகவே அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது.பேச்சில் நிதானம் தேவை. மற்றபடி உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள் என்றாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகள் உண்டாகலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
மீனம் (Pisces):
உங்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு.உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஒற்றுமை மேம்படும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும்.குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் இவற்றில் வெற்றியும் காண்பீர்கள் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
