பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கடனை அடைப்பது குறித்து முக்கிய திட்டம் தீட்டுவீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி ராசி நேயர்களே.! இன்று உங்களுக்கு இப்படியா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேஷ ராசி நேயர்களே..! 

பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கடனை அடைப்பது குறித்து முக்கிய திட்டம் தீட்டுவீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி நல்ல முடிவை எடுப்பீர்கள். பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான நல்ல முடிவை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.

கடக ராசி நேயர்களே...!

திட்டமிட்டது ஒன்றாக இருக்கும் நடப்பது வேறாக இருக்கும். இதைக் கண்டு மனம் தளர வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். அதைக் கண்டு மனம் தளர வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாக வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி நேயர்களே..!

எளிதாக முடிக்க வேண்டிய காரியம் கூட நீண்ட இழுபறிக்கு பின்னே முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ள வேண்டாம்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் உங்களுக்கு வந்து சேரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரலாம்.