12 ராசியினரில் யாருக்கு செம லக்கு தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே..!

சில பிரச்சினைகளிலிருந்து இன்று விடுபடுவீர்கள். எதையும் உதாசீனப்படுத்தாதீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.

மிதுன ராசி நேயர்களே...!

உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கல்விக்காக சில முயற்சிகளை எடுப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே...!

நட்பால் சில காரியங்கள் நிறைவேறும் நாள். மனதில் புதிய புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப் போன விஷயத்தில் மீண்டும் ஆதாயம் தரும் சில வேலைகளை எடுப்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களது ஆரோக்கியம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொலைபேசி வழியாக ஒரு நல்ல தகவல் உங்களுக்கு வரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தன வரவு திருப்தியாக இருக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள்.வியாபாரத்தை விரிவுப்படுத்த முயற்சி செய்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பொருளாதார நிலை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

வசதிகள் பெருகும். தன வரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டிய நாள். அதிகமாக செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இடமாற்றம் ஏற்படும். 

கும்ப ராசி நேயர்களே....!

மனக்கசப்பு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தானாக வந்து சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த பல வழிகளில் யோசனை செய்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

இன்று நாம் விரும்பியதை விரும்பிய செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர் உங்களுக்கு உதவியாக பேசுவார்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.