Holy basil: துளசி செடியின் பலன்கள்..! துளசி இலைகளை எப்போது பறிக்க கூடாது....வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன..?
Holy basil spiritual benefits: துளசி செடியின் பெருமைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதன் வாஸ்து, சாஸ்திர பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இந்து மதத்தில் அற்புத செடியாகவும், தெய்வீக செடியாக திகழும் துளசி செடியின் இலைகள் ஒவ்வொரு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அற்புத செடியின் பெருமைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதன் வாஸ்து, சாஸ்திர பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
துளசி அன்னை மகாலட்சுமிக்கும், விஷ்ணுவுக்கும் மிகவும் பிடித்தமானது. விஷ்ணு பகவானுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்வதால் மகிழ்ச்சி அடைகிறார். துளசி அன்னையை மகிழ்வித்தால், அனைத்து வகையான நிதி சிக்கல்களும் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் துளசியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. துளசி பூஜையில் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் துளசி செடி வைத்து எப்படி வழிபடுவது?
வீட்டில் துளசி செடி வைத்து வளர்த்தால் மட்டும் போதாது. அதனை தினமும் தீபம் ஏற்றி வழிபடுவதோடு, மூன்று முறை வலம் வர வேண்டும்.
துளசியில் பலவகைகள் இருக்கின்றன. கருந்துளசி இது காட்டுப்பகுதிகளில் தானாகவே வளர்ந்து வரும் செடியாகும். மற்றொன்று சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் சாதாரண துளசியாகும். இதனை தான் நாம் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.
இந்தத் துளசிக்கு காலை சூரிய உதயத்திற்கு முன்னர் சுத்தமான நீரை ஊற்ற வேண்டும் வெள்ளிக்கிழமை தோறும் பால் அபிஷேகம் செய்து நெய் தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றி துளசிச் செடியை மூன்று முறை பிரதட்சணம் செய்து வணங்கிட வேண்டும்.
துளசி இலைகளை எப்போது பறிக்க கூடாது:
சாஸ்திரங்களின்படி குறிப்பிட்ட நாட்களில் துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றின் போது துளசி இலைகளை பறிக்கக்கக்கூடாது.
இதனை பறித்தால், நமக்கு பெரும் துன்பம் தான் ஏற்படும். இதனை பறித்து தான் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. துளசியை இருக்கும் இடத்தில் வைத்தே பூஜித்தால் மட்டும் போதுமானதாகும்.
துளசி வழிபாடு வீட்டில் மகிழ்ச்சியைத் தரும்:
மாலையில் துளசியின் கீழ் தீபம் ஏற்றினால் லட்சுமி மகிழ்வாள். மேலும், அவரது அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும். வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நட்டால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடி எதிர்மறை சக்தியை அழிக்கிறது. மேலும், வீட்டில் பணம் எப்போதும் தங்கி இருக்கும். அதுமட்டுமின்றி, துளசி செடி குடும்பத்தை திருஷ்டியில் இருந்து பாதுகாக்கிறது.
வாடிய துளசி செடியை வீட்டில் வைக்காதீர்கள்:
வாடிய துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. வீட்டில் துளசி செடி காய்ந்திருந்தால், அதை புனித நதி அல்லது குளத்தில் அல்லது நிர் நிலைகளில் விட வேண்டும்.
துளசி நமக்கான பலன்கள் அனைத்தையும் சிறப்பாக கொடுத்திடும். அதுபோல் வீட்டிற்கு வரும் வெளியாட்கள் எவரும் துளசிச்செடியை தொட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மற்றவர்கள் துளசிச் செடியை தொடும் பொழுது அவர்களிடம் இருந்து வரும் எதிர்மறை சக்திகளினால் நமக்கு தீராத துன்பங்கள் சேர்ந்து விடும்.