இந்துஸ்தான் பள்ளியின் "யுரேகா - ஸ்டீம் கண்காட்சி 2019"..! வியந்துபோன இஸ்ரோ விஞ்ஞானி..! உற்சாகத்தில் மாணவர்கள்...! 

இன்றைய விஞ்ஞானம் ஓர் அதிசயம், அறிவியல்  மற்றும் பகுத்தறிவு சிந்தனையுடன் தொடங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

கிண்டியில் உள்ள இந்துஸ்தான் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஏற்பாடு செய்துள்ள "யுரேகா - ஸ்டீம் கண்காட்சி 2019" கற்பனைக்கு எட்டாத மற்றும் புதுமையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். ஒவ்வொரு படைப்பும் நாம் வாழும் வாழ்க்கையோடு எப்படி ஒன்றிணைந்து செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுதல் மிக மிக அவசியமும் கூட..

இந்த சிறப்பு கண்காட்சியின் நோக்கமே, மிக தெளிவான புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே... அதன் படி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகிய முக்கிய பாட பிரிவுகளை பற்றிய புரிதலும், நம் வாழ்க்கையில் கல்வி எந்த வகையில் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்பதை உணர்த்துவதாக அமைந்து உள்ளது இந்த கண்காட்சி

இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பேராசிரியர் வி.ராமமூர்த்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்று போது, 

மாணவர்கள் எப்படி  தங்களது திறமையை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும், எப்படி செயல்பாடுடன் கூடிய கல்வியை கற்க வேண்டும் என்பது குறித்தும், இவை அனைத்திற்கும் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் ஸ்கூல் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது என பெற்றோர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி உற்சாகப்படுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.