high court orders parents about children
பெற்றோர்களை தரக்குறைவாக பேசும் பிள்ளைகளாக நீங்கள்..? அப்படியென்றால் விரைவில் வீட்டை வெளியேற்றப்படுவீர். பெற்றோர்களுக்கு ஈடு இணையாக இந்த உலகில் வேறு எதுவும் பெரிது கிடையாது. ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், வீட்டில் உள்ள வயதான ஓய்வு பெற்ற பெற்றோர்களை பாரமாக நினைக்கும் பிள்ளைகள் அதிகரித்து உள்ளனர் .
அதுமட்டுமில்லாமல், வயதான பெற்றோர்களை வார்த்தைகளால் கொள்வதும் உண்டு, தரக்குறைவாக பேசி அவர்கள் மனம் புண்படும் படி செய்வதுண்டு. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இவ்வாறு தரக்குறைவாக பெற்றோர்களிடம் நடந்துக் கொள்ளும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற செய்யும் அதிகாரம் பெற்றோர்களுக்கு உண்டு என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
மதுக்கடைமையான முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது சகோதரர் சார்பில் வயதான,தங்கள் பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பாக, பெற்றோர்கள் பராமரிப்பு தீர்ப்பாயம் சில கருத்தை முன் வைத்து, பெற்றோர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, இரண்டு சகோதரர்களும் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவிற்கு தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர்களை பாரமாக நினைத்து , தரக்குறைவாக நடந்துக் கொள்ளும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற செய்யும் அதிகாரம் பெற்றோர்களுக்கு உண்டு என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
