சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறை, ஹோட்டல்களின் படுக்கை அறை, தங்கும் விடுதிகளின் குளியல் அறைகளில், உளவு பார்ப்பதற்காகவோ, வக்கிர எண்ணங்களுடனோ ரகசிய கேமராக்களை வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கேற்றார் போல், நிரூபிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன் கோவாவில் ஜவுளிக் கடை ஒன்றுக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அங்கு உடை மாற்றச் சென்றபோது அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று , சட்ட விரோதமாக ரகசிய கேமராவை வைத்து, அதன் மூலம் பெறப்படும் வீடியோக்களை, சமூக வலைதளங்களில் பரவ விடுவது அதிகரித்து வருகிறது. இதனால், பல குற்றச்சாட்டுகளும், அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.

எனவே, இது போன்று, உள் நோக்கத்தோடு ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்கள், பணியாளர்களை படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தியாகராய நகர் உதவி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.