தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!  எந்தெந்த மாவட்டத்தில் பேய்மழை தெரியுமா ..? 

தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டு உள்ளதால், அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நெல்லை, வேலூர், காஞ்சிபுரம்,தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மீனவர்களுக்கான அறிவிப்பு..! 

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மற்றும் விழுப்பறம் பகுதியில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்ட்டத்துடனும் காணப்படும் என்றும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.