வடகிழக்கு இந்தியா பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரசியமான உண்மைகள்!!

Facts About Northeast India  : இந்த கட்டுரையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி சில சுவாரசியமான உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

here is some interesting facts about northeast india in tamil mks

இந்தியாவின் வடகிழக்கு பகுதி மிகவும் அழகான பகுதியாகும். இங்கு ஆராயப்படாத பல இடங்கள் மற்றும் வளமான கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்துள்ளது. வடகிழக்கு இந்தியாவானது, 8 மாநிலங்கள் மற்றும் இயற்கையின் பேரின்பத்தில் திளைக்க விரும்புவோருக்கு புகலிடமாக உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அசாம், சிக்கிம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களும் அதன் சொந்த கலாச்சார உடைகள், உணவுகள், மொழிகள், மதம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றல் தனித்துவமானது என்றே சொல்லலாம்.. இருந்தாலும், இந்த மாநிலங்களில் ஒன்றிணைப்பது அவற்றின் தனித்தன்மை மற்றும் வளமான இயற்கை அழகுதான். எனவே, இப்போது இந்த கட்டுரையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி சில சுவாரசியமான உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் மர்ம கிணறு.. அச்சச்சோ! இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?

வடகிழக்கு மாநிலங்களின் சில சுவாரசியமான விஷயங்கள்:

1. அசாம்: அசாம் உலகின் மிகப்பெரிய மற்றும் சிறிய தீவுகளை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நதி தீவு அசாமில் உள்ள மஜூலி ஆகும். இது மொத்தம் 352 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது உள்ளுக்கு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இது காட்சியளிக்கும். இந்த பிரம்மபுத்திரா ஆற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள உமானந்தா தீவு உலகின் மிகசிறியளவில் மக்கள் வசிக்கும் நதி தீவாக கருதப்படுகிறது. மேலும் இந்த நதி சூரிய சக்தி உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அசாம் பிரம்மாண்டமான தேயிலை தோட்டங்களுக்கு நன்கு அறியப்பட்டவை.

2. அருணாச்சலப் பிரதேசம்: இந்தியாவின் கிழக்கு பகுதியான அருணாச்சலப் பிரதேசம் தான் முதலில் சூரிய உதயத்தை காண்கிறது. இதனால்தான் இது 'உதயசூரியனின் நிலம்' என்றும் அழைக்கப்படுகிறது. 

3. மணிப்பூர்: மணிப்பூர் எதற்கு பெயர் பெற்றது என்றால், முதலாவது இமா  என்னும் சந்தையானது பெண்களால் மட்டுமே இயங்கும் உலகின் ஒரே சந்தையாகும். 16-ஆம் நூற்றாண்டில் மணிப்பூரில் உள்ள இமா மார்க்கெட் பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பெண் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்கள்  தினசரி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வார்கள். இரண்டாவது சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அம்சம் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா. இது உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா ஆகும். இது லோக் டாக் ஏரிக்குள் அமைந்துள்ளது.

இதையும் படிங்க:  Amazing Facts: தமிழ்நாடு பற்றிய இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

4. நாகலாந்து: இம்மாநிலம் 'உலகின் அமுர் பால்கன் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அமுர் பால்கன் என்று என்று பறவையானது ஆசியாவை பூர்விகமாகக் கொண்டது. இது 22,000 கிலோ மீட்டர் வரை பயணித்து, குளிர்காலத்தில் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வெடுப்பதற்காக நாகலாந்து வரும். நாகலாந்து இந்த பறவைகளுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குகிறது.

5. மேகாலயா: மேகாலயாவில் கிழக்கு காசி மலைப்பகுதியில் அமைந்துள்ள மவ்சின்ராம் உள்ளது. இது உலகிலேயே மிகவும் ஈரமான இடமாக உள்ளது. மேலும் 'ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்' ஷில்லாங் இங்கு தான் உள்ளது.

6. மிசோரம்: மிசோரம் பசுமையான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு இருக்கும் புக்கிங் குகையானது உள்ளூர் புராணங்களின்படி, ஒரு ஹெர்பியின் மூலம் செதுக்கப்பட்டது.

7. திரிபுரா: இது வடக்கில் உள்ள ஒரே மிதக்கும் அரண்மனையை பெருமைப்படுத்துகிறது. நீர் மஹால் புகழ்பெற்ற அரச வரலாற்றை கொண்ட ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக உள்ளது.

8. சிக்கிம்: கோவாவிற்கு அடுத்தபடியாக இதுதான் இந்தியாவின் இரண்டாவது சிறிய மாநிலம் ஆகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios