Asianet News TamilAsianet News Tamil

இதயம் ஆரோக்கியமாக இருக்க இதுல ஒன்னு குடிங்க.. ஸ்ட்ராங்கா இருக்கும்!

Best Drinks For Heart Health : உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க, இங்கு கொடுக்கப்பட்டுள்ள 5  பானங்களில் ஒன்றை தினமும் குடியுங்கள்.

here are some drinks that may be good for your heart in tamil mks
Author
First Published Aug 28, 2024, 7:30 AM IST | Last Updated Aug 28, 2024, 7:30 AM IST

இந்தியாவில் தற்போது இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால், இதய நோய் அனைத்து வயதினரையும் தாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவையாகும். உங்களுக்கு தெரியுமா..? மற்ற நோய்களை விட இதய நோய் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு இறப்புகளை ஏற்படுகிறது.

நீங்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இதய ஆரோக்கியத்திற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான பானங்களை குடிப்பது மிகவும் அவசியம். இந்நிலையில் இதய ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில பானங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Health Benefits of Walking: அடேங்கப்பா.. நடைபயிற்சி சென்றால் இதயத்திற்கு இவ்வளவு நன்மைகளா?

இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும் பானங்கள்

1. கிரீன் டீ : 

இப்போதெல்லாம் பல கிரீன் டீ குடிக்க விரும்புகிறார்கள் இந்த டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இது வீக்கத்தை மற்றும் வலியை குறைக்கும். இந்த டீ குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் குறையும். எனவே, ஒரு நாளைக்கு இந்த டீயை மறக்காமல் குடியுங்கள்.

2. ஓட்ஸ் பால் : 

ஓட்ஸ்பால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. இந்த பால் எளிதில் ஜீரணமாகும். முக்கியமாக, இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இந்த பாலை குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமின்றி, இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஒரு கப் பால் குடியுங்கள்.

3. பழசாறுகள் :

இவையும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், செரிமாண்ட மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதற்கு நீங்கள் வெளியில் வாங்கி குடிக்காமல், வீட்டில் செய்து குடியுங்கள். ஏனெனில், வெளியில் சர்க்கரை அதிக அளவு சேர்ப்பதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதே சமயம்,நீங்கள் வீட்டில் தயாரித்து குடித்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதையும் படிங்க:  இந்த 6 மட்டும் போதும்.. உங்க இதயத்தை சும்மா இரும்பு மாதிரி ஸ்ட்ராங்கா ஆக்க...

4. புதினா நீர் : 

புதினா நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீக்கி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.மேலும், இந்த நீரில் இருக்கும் கூறுகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.இதனால் இதயமஅபாயத்தை குறைக்கலாம்.

5. கேரட் மட்டும் பீட்ரூட் ஜூஸ் :

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் நைட்ரேட்கள் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. கேரட்டில் பீட்டா கரோட்டில் உள்ளது. இது ரத்த நாளங்களை சுத்தம் செய் உதவுகிறது. கேரட் மட்டும் பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios