ப்ரிட்ஜ் கூலிங் ஆகவில்லையா? கண்டிப்பாக காரணம் இதுவாகத்தான் இருக்கும்!
உங்கள் வீட்டின் ப்ரிட்ஜில் கூலிங் குறைந்து கொண்டே வருவதற்கான காரணங்கள் என்னை என்பதை குறித்து இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

கோடை மதியம், ஜில்வாட்டர் குடிக்கலாம் என்று நீங்கள் உங்கள் பிரிட்ஜை திறக்கிறீர்கள். ஆனால் ப்ரிட்ஜில் கூலிங் இல்லை. என்ன ஒரு விரும்பத்தகாத தருணம்! உங்கள் ஃப்ரிட்ஜில் ஏன் போதுமான அளவு கூலிங் இல்லை என்பதற்குப் பின்னால் 10 சாத்தியமான காரணங்கள் உள்ளன:
இதையும் படிங்க: யப்பா இது தலையா இல்ல வேற.. தலையில் ஃப்ரிட்ஜை வைத்து சைக்கிள் ஓட்டும் இளைஞர்.. வீடியோ வைரல்..!!
1. பிரிட்ஜ் கதவில் இருக்கும் காஸ்கெட்டில் சிறிய வெடிப்பு அல்லது ஓட்டைகள் இருந்தால் ப்ரிட்ஜில் கூலிங் தங்காது. இதனால் மின்சாரம் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
2. ப்ரிட்ஜில் கூலிங் இல்லாததற்கு நீங்கள் உங்கள் பிரிட்ஜின் கதவை ஒழுங்காக மூடாமல் இருப்பதும் தான். மேலும் நீங்கள் ஃப்ரிட்ஜை மீண்டும் குளிர்ச்சியாக அதிக நேரம் எடுக்க வேண்டியிருக்கும். இதனால் சில கோளாறுகள் கூட நீங்கள் சந்திக்கலாம்.
3. ப்ரிட்ஜில் கூலிங் நிற்க ப்ரிட்ஜின் டெம்பரேச்சர் சரியாக இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் டெம்பரேச்சர் 4 டிகிரி செல்சியஸ் மற்றும் பிரீசர் டெம்பரேச்சர் 0 டிகிரி செல்சியஸ் அல்லது -18 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்க வேண்டும்.
4. ப்ரிட்ஜில் அதிகமான பொருட்களை வைக்காதீர்கள். அதிகமான பொருள் வைப்பதினால் ப்ரிட்ஜில் கூலிங் தங்காது. எனவே இடைவெளி விட்டு பொருட்களை வைக்க வேண்டும்.
5. ப்ரிட்ஜில் கூலிங் தங்க நீங்கள் பிளாஸ்டிக் அல்லது மூடப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.
இதையும் படிங்க: உங்கள் பிரிட்ஜை சுவரிலிருந்து இந்த தூரத்தில் வையுங்கள்.. இனி கரண்ட் பில் அதிகமாகாது..!!
6. உங்க ப்ரிட்ஜில் உங்கள் பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ் கட்டி படிந்து இருந்தால் அவற்றை உடனே அகற்றுவது நல்லது ஏனெனில் அவை உங்கள் ஃப்ரிட்ஜை சீக்கிரத்தில் கழுதாக்கும் மற்றும் மின்சாரத்தை அதிகமாக இழுத்துக் கொள்ளும். இதனால் உங்களுக்கு செலவு தான் அதிகமாக வரும்.
7. மேலும் உங்கள் ப்ரிட்ஜுக்கும் வீட்டின் சுவருக்கும் குறைந்தது 2 இன்ச் இடைவெளியாவது இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
8. நீங்கள் உங்கள் ப்ரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சுத்தம் செய்ய விட்டால் நாளடைவில் ப்ரிட்ஜில் வெண்ட்களை அழுக்குகளில் தங்கிவிடும். இதனால் ப்ரிட்ஜில் கூலிங் சிக்கல் வரும்.
9. அதுபோல் உங்கள் ப்ரிட்ஜின் கண்டென்சர் காயிலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் தூசி மற்றும் அழுக்குகள் படிந்தால், ப்ரிட்ஜில் நாளுக்கு நாள் கூலிங் குறைந்து கொண்டே வரும்.
10. வீட்டின் தரையில் எவ்வித ஏற்றம் இறக்கம் இல்லாத இடத்தில் ப்ரிட்ஜை வைக்க வேண்டும். மேலும், வருடத்திற்கு ஒரு முறையாவது ப்ரிட்ஜை முழுமையாக சரி செய்வது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D