தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெப்ப சலனம் காரணமாக,ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென்மேற்கு பருவமழை தற்போது கேரளாவில் வலுப்பெற்று இருப்பதால் இதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தோடு கணக்கிட்டு பார்த்தால், சின்னக்கல்லாரில் 7 செண்டி மீட்டர் மழையும், நீலகிரியில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இந்த வாரம் முழுவதும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.