தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. உள்கர்நாடகம் முதல் குமரி மாவட்ட கடலோர பகுதிகள் வரை மேல் அடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தக்கலை இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் பெரும்பாடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக உதகையில் தற்காலிகமாக படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். கோடைவிடுமுறையை என்ஜாய் செய்ய வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.