தத்தளிக்கும் மும்பை..! மீண்டும் கனமழை எச்சரிக்கையால் நடுக்கத்தில் மக்கள்...! 

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மும்பை மாநகரம் வெள்ளக்காடாக மாறி உள்ளது. பொதுவாகவே ஆண்டுதோறும் செய்து வரும் பருவ மழை, இந்த முறை அதிகமாக பெய்து இருப்பதால் மும்பை வெள்ளத்தில் மிதப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழையை விட கூடுதலாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 3 நாட்களாக விடாது பெய்து வந்த கனமழையால் மும்பை மாநகரம் முழுவதும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நேற்று முன் தினம் மட்டும் மும்பாயில் 360 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல். 

நேற்று ஒரே நாளில் காலை முதல் மாலை வரை பெய்த கன மழையில் 100 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது இன்னும் சொல்லப் போனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 540 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பிடும்போது இதுவே அதிகமானது. சான்டா குரூஸ் பகுதியில் 91 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ராஜ்காட், பால்கர், மும்பை, தானே உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மும்பை வாழ் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதும். எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மக்கள் வெளியில் நடமாடமுடியாமல் உள்ளனர். ரயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் மேலும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு  உள்ளது என்பது கூடுதல் தகவல்.