சென்னையில் அட மழை..! மக்கள் குஷியோ குஷி..! 

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் மழை இல்லாமல் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். குறிப்பாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. தற்போது வரை தண்ணீர் பஞ்சம் அதிகரித்து தான் உள்ளது. அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பெரும் அல்லல் ஏற்பட்டது.

இந்த நிலையில் மழை வர வேண்டி, ஆளும் அதிமுக சார்பாக தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும், யாகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 

இந்த நிலையில் தற்போது கோடம்பாக்கம், தி நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, கே கே நகர், வடபழனி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.