அத்தி வரதரை குளத்தில் வைத்ததால் பொளந்து கட்டும் மழை..! வேகமாக நிரம்புது குளம்..!   

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிக சிறப்பான நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதியான நேற்று முடிவடைந்தது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிறகு நாற்பத்தி எட்டாம் நாளான நேற்று அத்தி வரதரை மீண்டும் அமிர்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டது. இதுவரை கடந்த 48 நாட்களில் ஒரு கோடியே 8 லட்சம் பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்து உள்ளனர்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் மீண்டும் அத்தி வரதர் வைபவம் 2059 ஆம் ஆண்டு தான் நடைபெறும். இந்த நிலையில் இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 1939 ஆம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றது. அப்போதைய காலகட்டத்தில் 48 நாட்கள் நிகழ்வு முடிந்த பிறகு அமிர்தசரஸ் குளத்தில் அத்தி வரதரை வைக்கப்பட்ட பின்பு நல்ல மழை பொழிந்து உள்ளது. மேலும் அவ்விரு ஆண்டுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அத்தி வரதர் வைபவம் முடிந்து குளத்தில் வைக்கப்பட்ட பின்பு நல்ல மழை பொழிந்து உள்ளது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டான இந்த ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் வைபவத்திற்கு பிறகு மீண்டும் அமிர்தசரஸ் குளத்தில் அத்தி வரதரை வைக்கப்பட்ட பின்பு நல்ல மழை வெளுத்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முதல் தமிழகம் முழுவதுமே பரவலான மழை பெய்து வந்தாலும் குறிப்பாக13 மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதற்கேற்றவாறு வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் நேற்று இரவு முதலே பெய்யத் தொடங்கிய கனமழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சென்னையிலும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மூன்று மாதங்களாக வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் வறட்சி ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் அத்தி வரதர் வைபவம் தொடங்கியது. இந்த நிலையில் அவர் இல்லத்தில் வைக்கப்பட்ட பிறகு சொல்லி வைத்தவாறே நல்ல மழை பொழிந்து வருவதால் பொதுமக்களின் ஆன்மீக நம்பிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் வறண்டு இருந்த அமிர்தசரஸ் குளம் தற்போதைய நிலையில் மழை அதிகமாக பெய்து வருவாத்தால் கிண்டி கிடு உயர்ந்து வருகிறது.