18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..! வானிலை ஆய்வு மையம் சொன்னது இதுதான்...! 

வெப்ப சலனம் மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் திருவாரூர் மதுரை திண்டுக்கல் திருவள்ளூர் காஞ்சிபுரம் சிவகங்கை கடலூர் விழுப்புரம் தஞ்சாவூர் கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் தீவிரமடைந்து வருவதால் அதன் தாக்கத்தினால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகா புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அதே போன்று பெரிய அளவில் மழையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.