தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் மற்றும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதுமே பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பாக திருநெல்வேலி விருதுநகர் தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை கன்னியாகுமரி புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் திருச்சி காரைக்கால் பெரம்பலூர் நாகப்பட்டினம் கோவை காஞ்சிபுரம் அரியலூர் கடலூர் நீலகிரி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுவையிலும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.