தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் வெப்பசலனம் காரணத்தினாலும் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் குறிப்பாக வேலூர் கடலூர் தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கோவை ஈரோடு தேனி திண்டுக்கல் சேலம் நீலகிரி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் கன்னியாகுமரி புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆகிய இடங்களில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்