தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...! 17 ஆம் தேதி தொடங்குகிறது வட கிழக்கு பருவ மழை..! 

வடகிழக்கு பருவமழை நாளை மறுதினம் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை நாளை மறுதினம் நிறைவு பெறும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதன்படி அடுத்துவரும் 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்காரணமாக வரும் 17, 18 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.