கனமழை எச்சரிக்கை...! தமிழகத்தில் பேய் மழை பெய்து வரும் "மாவட்டங்கள்" இதோ...! 

வெப்பச்சலனம்  காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் விழுப்புரம் திருவண்ணாமலை ராமநாதபுரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால் விவசாய பெருமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் 

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், லட்ச தீவு பகுதியில் வேகமாக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.