இந்த 9 மாவட்டத்தில் பேய் மழை பெய்யப் போகுதாம்..!  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...! 

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த  சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதுமே இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்து உள்ளது.

குறிப்பாக கடலூர் விழுப்புரம் நாமக்கல் திருச்சி மதுரை கிருஷ்ணகிரி தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டரும், ஆம்பூரில் 15 சென்டி மீட்டரும், குடியாத்தத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் இதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே வேளையில் இன்று காலை முதலே சென்னையில் நல்ல வெயில் நிலவி வருகிறது.