கன்னா பின்னான்னு காட்டப்போகும் பேய்மழை...! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..! 

வட இந்தியாவில் அடுத்து வரும் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அது மட்டுமல்லாமல் கர்நாடகா தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மத்திய பிரதேசம் குஜராத் கர்நாடகா மகாராஷ்டிரா கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதேபோன்று குஜராத் முதல் குமரி வரையிலான ஆறு மாநிலங்களில் சுமார்1, 600 கிலோ மீட்டர் வரை பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக கேரள மாநிலத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தால் உயிரிழந்து உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

கேரளாவைப் பொறுத்தவரையில் ஆலப்புழா வயநாடு உள்ளிட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது இந்த தருணத்தில் அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் இது படிப்படியாக குறையும் போது அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களான மத்திய பிரதேசம் உத்திரப் பிரதேசம் ஹரியானா டெல்லி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். அதன் பின்னர் படிப்படியாக வடமாநிலங்களில் மழை அளவு குறையும் என்றும் தற்போது இரண்டு நாட்களுக்கு மட்டும் மீனவர்கள் அரபி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.