12 மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..? 

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் அதிகபட்சமாக செய்யூரில் 7 சென்டி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக ராமேஸ்வரம் மண்டபம் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அடுத்து வரும் இரண்டு தினங்களில் புதுக்கோட்டை நாகப்பட்டினம் ராமநாதபுரம் விழுப்புரம் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருவாரூர் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் நாளை ராமநாதபுரம் தூத்துக்குடி தென்காசி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வரும் 30ஆம் தேதி வரைஇதே நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது என்பதால்  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 7.8 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 77 பதிவாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.