5 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை .! இந்த  லிஸ்டில் உங்கள் மாவட்டம் இருந்தால் உஷார் மக்களே...! 

தமிழகத்தால் 5 மாவடபங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, கடலூர் திருவாரூர் தஞ்சை நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிகமான மழை கொடுத்துள்ளது என்றும் சென்னையில் மட்டும் குறைவான மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அதாவது 68 சென்டி மீட்டருக்கு பதில் 58 சென்டிமீட்டர் மழை கிடைத்து உள்ளது.

அதே போன்று தமிழகத்தில் 40 செ.மீ பதிலாக 43 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதன்படி 6 % மழை அளவு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு  நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு மிதமான மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.