5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகுது மழை...! உஷார் மக்களே..! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மேற்கு பருவ மழையின் காரணமாக தென் மாவட்டங்களில் நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதேப்போன்று வடமாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் வறட்சியை சந்திக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும் இரவு நேரத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. அதன்படி வேளச்சேரி, வடபழனி, விமான நிலையம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதேபோன்று அதிகபட்சமாக தாம்பரத்தில் 14 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வேளச்சேரி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்குள்ள சில வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த ஒரு நிலையில் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களிலும் புதுவையிலும் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரண்டாம் தேதி கடலூர் நாகை திருவாரூர் தேனி வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருவள்ளூர் நீலகிரி திண்டுக்கல் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.